ETV Bharat / state

ஊரடங்கு, மழையால் வீணாகும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் வேதனை - Perambalur news

பெரம்பலூர்: கரோனா ஊரடங்கு காரணமாக அலுவலர்கள் வராத காரணத்தாலும், மழையாலும் கொள்முதல் நிலையக் கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு, மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்

author img

By

Published : Apr 27, 2020, 1:42 PM IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அகரம் சீகூர், வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இந்த வருடம் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை செய்து, கொள்முதலுக்காக அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்து திறந்தவெளி கிடங்கில் சேகரித்து வைத்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.

ஆனால் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையத்திற்கு அலுவலர்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று அகரம் சீகூர் உள்ளிட்ட பெரம்பலூரின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் எடுத்து வந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தன.

ஏற்கனவே ஊரடங்கால் பொருள் ஆதாரங்களுக்காக அவதிப்படும் விவசாயப் பெருமக்கள் காத்திருந்து அறுவடை செய்த நெல் மூட்டைகளும் மழையில் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பெரும் வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அடுத்த சாகுபடிக்கு மூலதனம் இல்லை: விவசாயிகளை புலம்பவைத்த ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.