மார்கழி மாதம் என்றாலே பெண்கள் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு அழகுப்படுத்துவர். இதற்காக பல வண்ணக் கோலப்படிகளை தயாரித்து வருகிறார் பெரம்பலூர் பாரதிதாசன் தெருவில் வசிக்கும் ஜீவானந்தம்.
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளை கோலமாவு, கலர் பொடி போன்றவை வாங்கி வந்து பல்வேறு வண்ணங்களில் கோலமாவு தயார் செய்கின்றார். வெள்ளை கோல மாவில் வண்ண ரசாயத்தை கலந்து, காய வைத்து பாக்கெட்டுகளில் தயார் செய்து விற்பனை செய்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளாக கோல மாவு விற்பனை செய்துவரும் ஜீவானந்தம், 5 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை பல அளவுகளில் கோலப்பொடி விற்பனையாகிறது. மற்ற மாதங்களில் கோலப்பொடி சுமாராக விற்பனையானாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கோலமாவு அமோகமாக விற்பனையாகிறது.
இதையும் படிங்க...உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை