ETV Bharat / state

'தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்' - முகமது அலி

பெரம்பலூர்: அகில இந்திய அளவில் சிஐடியு தொழிற்சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அகில இந்திய விவசாயம் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (செப்.5) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Perambalur Formers protest
Perambalur Formers protest
author img

By

Published : Sep 6, 2020, 3:38 PM IST

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதை குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முகமது அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய முகமது அலி, 'நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் உரிய நிவாரணம் வழங்கவில்லை. பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதம மந்திரியின் கிஷான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. 40 லட்சம் சிறு, குறு விவசாயிகள் உள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் பல்லாயிரக்கணக்கான புதிய பினாமி நபர்களை இத்திட்டத்தில் சேர்த்து நூற்றுக்கணக்கான அளவில் மோசடி நடைபெற்றுள்ளது.

பல்வேறு பகுதிகளில் அலுவலர்களோடு பாரதிய ஜனதா கட்சியையும் அதன் இணை அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸையும் இணைத்து அலுவலர்களோடு, தங்களுடைய சுய நலத்திற்காக இத்திட்டத்தை பயன்படுத்திக் கொண்டனர். பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அலுவலர்கள் இதற்கு விலை போய் உள்ளனர் .

மேலும் தமிழ்நாடு முழுவதும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அலுவலர்களை, தனி நபர்களை சட்ட நடவடிக்கை மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அலுவலர்களை நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய அரசு கொண்டுவரவுள்ள இஐஏ (EIA) திட்டத்தின் மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு இதற்கு வழிவகை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.