பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள உழவர் வேளாண் அங்காடியில் பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பாக இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனையடுத்து இயற்கை விவசாயம் செய்யும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 'நம்ம ஊர் நம்மாழ்வார்கள்" பாராட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து இயற்கை வேளாண் குறித்து கருத்துரைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய நாட்டு விதைகள், தானிய வகைகள், மூலிகைகள், பூச்சி விரட்டி, சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட உணவு வகைகள் பாரம்பரிய நெல் வகைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் இயற்கை விவசாயிகள் , பல்வேறு தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...கேரளாவின் இளம் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றார் ரேஷ்மா!