தமிழ்நாடு முழுவதும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்றும் (டிச.12) நாளையும் (டிச.13) சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளருமான சஜ்ஜன் சிங் ஆர்.சவான் கலந்து கொண்டார்.
தொடர்ந்து துறைமங்கலம் டி.இ.எல்.சி. பள்ளி, குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளி, மேலமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை அவர் பார்வையிட்டார்.