பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வரும் 7ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரித்தல் குறித்தும், வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.