பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மார்ச் 1ஆம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிராமங்கள்தோறும் கழகக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
கழகத்தின் 15ஆவது உட்கிளை - ஊர்க்கிளை தேர்தலை ஒற்றுமையாகவும், ஒருமனதாகவும், ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்துவது எனவும் மேலும் மத்திய பாஜக பாசிச அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: 'கடும் நடவடிக்கை பாயும்' - ஒன்றிய செயலாளர்களுக்கு துரைமுருகன் அலெர்ட்!