தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சாந்தா தலைமையில், வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் மற்றும் அதிமுக வேட்பாளர் சிவபதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் உள்ளிட 32 பேரின் வேட்புமனுக்களில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டு, 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.