பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் தற்போது மாவட்டம் முழுவதும் பனைமர விதைப்புப் பணி நடைபெற்றுவருகிறது. பனைமரம் பல்வேறு பயன்களை தருவதால் 'கற்பக விருட்சம்' என்றே அழைப்பர். பனை ஒலை, பனவெல்லம், பன கருப்பட்டி உள்ளிட்ட அதன் ஒவ்வொரு பொருட்களும் பல்வேறு பயனளிப்பதாக உள்ளது.
அதனடிப்படையில் செங்குணம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பனை விதைப்புப் பணியை தொடங்கிவைத்து ஏரிப் பகுதிகளில் பனை விதையை நட்டார். இம்மாவட்டத்தில் மொத்தம் எட்டு லட்சம் பனை விதைப்புப் பணிகள், நீடித்த நிலையான மானவாரி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு மாவட்ட முழுவதும் நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் திரளானோர் கலந்துகொண்டனர்.