பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தேனூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை இன்று (டிச24) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மினி கிளினிக்கில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தாய்மார்களுக்கு குடும்ப நல பெட்டகம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவித்தொகை, வளர்இளம் பெண்களுக்கு ஊட்டசத்து மருந்து ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கினர். இதையடுத்து, பொதுமக்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 6 மாதத்திற்கு மட்டும் தான் அம்மா மினி கிளினிக்கா?