கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்ளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பணிபுரியும் வருவாய் துறை, கல்வித் துறை, சமூகநலத் துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய கபசுரக் குடிநீரை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்!