கால்நடைகளைத் தாக்கும் மாட்டம்மை எனப்படும் எல்.எஸ். டி (Lumpy skin disease) நோயினைக் கட்டுப்படுத்த அரசின் ஆலோசனைகளை பின்பற்றக்கோரும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'ஆரோக்கியமான மாடுகளில் இருந்து நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்ட மாடுகளை உடனடியாக தனிமை படுத்துங்கள். கொசுக்கள், ஈக்கள், உண்ணி போன்ற கடிக்கும் பூச்சிகள் மாட்டம்மை நச்சு உயிரியை பரப்பும் திசையன்களாக (arthropod vectors) செயல்படுகின்றன.
பாதிக்கப்படாத மாடுகளில் பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும், தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்பட சரியான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாட்டு பண்ணைகளில் ரசாயனங்கள், கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும், மாட்டம்மை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்த கால்நடைகளையும் நோய் பாதிக்கப்படாத பகுதிகள் அல்லது பண்ணைகளில் அறிமுகப்படுத்தக்கூடாது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயற்ற பகுதிகளுக்கு கால்நடைகள் நடமாட்டத்தை கடுமையாக கட்டுப்படுத்துவது உறுதிசெய்தல், இறப்பு நிகழ்வுகளில் கால்நடைகளின் சடலத்தை நிலையான கிருமிநாசினி நெறிமுறைகள் கடைபிடித்து ஆழமான அடக்கம் மூலம் அகற்ற வேண்டும்.
தற்போது நோயுற்ற விகிதம் சுமார் 20-10 சதவீதமாகவும், இறப்பு 5-1 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் உற்பத்தி குறையும் என்பதால் நோய் பரவுதலை தடுக்க மேற்கண்ட நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து தங்கள் கால்நடைகள் கட்டும் இடங்களில் மாலை 6 மணி அளவில் நொச்சி இலை சருகுகள், வேப்பிலை சரக்குகளை கொண்டு புகை அடிப்பதால் கால்நடைகளை தாக்கும் கொசுக்களை கட்டுப்படுத்த முடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தற்சார்பு உழவம், கால்நடை வளர்ப்பு.. இதைவிட வேற என்னங்க வேணும்? கலக்கும்முன்னாள் எம்எல்ஏ