இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தீவனமான சோளம், வேலிமசால் வளர்த்தல் திட்டத்தின் கீழ் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய நபர் ஒன்றுக்கு 0.25 ஏக்கர் (25 சென்ட்) நிலப்பரப்பில் பயிரிட்டு வளர்க்க தேவைப்படும் சோளம், வேலிமசால் விதைகளுடன் அவைகளை பயிரிடத் தேவையான உரங்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. ஒருங்கிணைந்த தீவன புல் பாத்திகள் அமைத்தல் திட்டத்தில், 70 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய ஒரு நபருக்கு பத்து சென்ட் நிலப்பரப்பில் பயிரிட்டு வளர்க்க தேவைப்படும் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மானாவாரியில் தீவன சோளம், காராமணி வளர்த்தல் திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதியற்ற குறைந்தது இரண்டு கால்நடைகளுக்கு மேல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆயிரத்து 500 ஏக்கரில் ஒரு நபருக்கு 0.25 ஏக்கர் முதல் இரண்டு ஏக்கர் வரை பயிரிடத் தேவையான தீவன விதைகள் இலவசமாக வழங்கப்படும்.
புல் வெட்டும் கருவி 50 பயனாளிகளுக்கு தலா ஒன்று வீதம் 50 புல்வெட்டும் கருவி 75 விழுக்காடு மானியமும் 25 விழுக்காடு பயனாளிகள் பங்கு தொகையுடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் இதுவரை பயன்படாத பெரம்பலூர் மாவட்டத்தில் நிலம் இருக்கும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் உரிய ஆவணங்களோடு வரும் 10/08/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், ஆவின் கூட்டுறவு ஒன்றிய உறுப்பினர்கள், இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றவர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தற்சார்பு உழவம், கால்நடை வளர்ப்பு.. இதைவிட வேற என்னங்க வேணும்? கலக்கும் முன்னாள் எம்எல்ஏ