பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள ஒதியம் என்ற இடத்தில், பெரம்பலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டேங்கர் லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபந்து நேர்ந்தபோது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் உடலில் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மங்கலமேடு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய அலுவலர்கள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓட்டுநர் கண் அயர்ந்ததால் வாகனம் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு