ETV Bharat / state

உதவி தொகை பெற 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் - பெண் ஊழியர் கைது

பெரம்பலூர்: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் அரசின் உதவித் தொகை பெற இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரை லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
author img

By

Published : Jan 29, 2020, 9:55 PM IST

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி எறையசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ்(27). இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஷாலினியுடன் பிப்ரவரி ஏழாம் தேதியன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நான்கு கிராம் தாலிக்குத் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பெற ஆன்லைன் மூலம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஷாலினி விண்ணப்பித்திருந்தார்.

இவ்விண்ணப்பத்தை சரிபார்க்க பெரம்பலூர் ஒன்றிய அலுவலரான ஷெரீன் ஜாய்(54) எறையசமுத்திரம் கிராமத்துக்கு ஜனவரி 27ஆம் தேதி வந்தார். அப்போது ஷாலினி, குடும்பத்தினருடன் வெளியே சென்றதால் வீடு பூட்டியிருந்தது. ஆகவே, ஷெரீன் ஜாய் அலைபேசி மூலம் ஷாலினி குடும்பத்தினரை தொடர்புகொண்டு இத்திட்டத்தை பரிந்துரை செய்வதற்காக இரண்டாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது

இதனை ஷாலினி தனது வருங்கால கணவர் சதிஷிடம் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய இரண்டாயிரம் ரூபாயை ஷாலினியின் அம்மா சாரதா மாவட்ட அலுவலகத்திற்கு சென்று ஷெரீன் ஜாயிடம் நேற்று மதியம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் ஷெரீன் ஜாயை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது - விஏஓ தலைமறைவு!

Intro:பெரம்பலூரில் மூவாலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டத்தின் கீழ் அரசின் உதவித் தொகை பெற பரிந்துரைக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் ஊழியர் கைது
Body:
பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ்(27). இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஷாலினியுடன் பிப்.7 அன்று திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கிராம் தாலிக்குத் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பெற ஆன்லைன் மூலம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஷாலினி விண்ணப்பித்திருந்தார்.
இவ்விண்ணப்பத்தை சரிபார்க்க பெரம்பலூர் ஒன்றிய ஊர் நல அலுவலரான ஷெரீன் ஜாய்(54) எறைய சமுத்திரம் கிராமத்துக்கு ஜன.27 அன்று சென்றார். அப்போது ஷாலினி குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். இதனால் செல்போன் மூலம் ஷாலினி குடும்பத்தினரை தொடர்புக்கொண்ட ஷெரீன் ஜாய், ‘பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பத்தின் நகல் மற்றும் நலத்திட்ட உதவிபெற பரிந்துரை செய்வதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சத் தொகை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.
இந்த விபரத்தை ஷாலினி தனது வருங்கால கணவர் சதீஸிடம் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஸ் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி ரசாயணப் பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்தை ஷாலினியின் அம்மா சாரதா ஊர் நல அலுவலர் ஷெரீன் ஜாய்யிடம் நேற்று மதியம் வழங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக அவரைக் கைது செய்தனர்.Conclusion:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.