பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நேற்று (ஜூலை 22) தேர்தல் நடைபெற்றது. 112 உறுப்பினர்களைக் கொண்ட பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள், தேர்தலில் இரண்டு குழுவாகப் போட்டியிட்டனர்.
இதில் தலைவர் துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, சங்கத் தலைவராக திருநாவுக்கரசு, செயலாளராக கிருஷ்ணராஜ், பொருளாளராக சிவசங்கர் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலையில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் மாலை 7 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மூளையில் ரத்தக் கட்டியால் கை கால்கள் செயலிழந்த நோயாளியை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை!