பெரம்பலூர் மாவட்டம் எசனை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நேற்று (18/2/20) காலையில் வீட்டை பூட்டிவிட்டு ஊர்ப்புறப் பகுதியில் தனது பெட்டிக் கடைக்கு சென்றுள்ளார்.
அதையடுத்து மாலை வீடு திரும்பியபோதுதான் வீட்டின் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டதும், பீரோவில் உள்ள செயின், மோதிரம், ஜிமிக்கி, மூக்குத்தி என மொத்தம் பத்து பவுன் தங்க நகையும், 5 ஆயிரத்து 500 ரூபாயும் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி அருகே திமுக பிரமுகர் மளிகை கடையில் திருட்டு!