கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. நாள்தோறும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த எழுவரில், ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், V.களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, V.களத்தூர் காவல் நிலையத்தில் அவருடன் பணிபுரிந்த காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என அனைவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்றுவரும் இந்தக் காவலர்களை, ஊக்குவிக்கும் விதமாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேரில் சென்று பழங்கள் வழங்கி அனைவரையும் நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது உடன் சில காவலர்கள் இருந்தனர். முகக்கவசம் அணிந்தும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றியும் பாதுகாப்பாய் பாதிக்கப்பட்ட காவலர்களை சந்தித்து திரும்பியுள்ளார் நிஷா.
இதையும் படிங்க: தமிழகக்தின் நீராதார உரிமையை பறிக்கப் பார்க்கிறது மத்திய அரசு - தமிமுன் அன்சாரி