ETV Bharat / state

21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்!

author img

By

Published : Jul 13, 2021, 10:14 PM IST

மேற்கு வங்க மாநிலத்தில் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

perabalur military man death
perabalur military man death

பெரம்பலூர்: ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் 23 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துவருகிறார். சங்கர் கடந்த ஜூலை 10ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், ராணுவ நடைமுறைகள் முடிந்த பிறகு அவரது உடல் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

இதையடுத்து, உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

21 குண்டுகள் முழங்க  நல்லடக்கம்
21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

இதையடுத்து, தொடர்ந்து ராணுவ வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.