பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூடலூர் அரசு உயர் நிலைப்பள்ளியில், சுமார் 1440 சதுர அடியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் முயற்சியால் பிரமாண்ட காமராஜர் ஓவியம் வரையப்பட்டது .
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் அருகே பொன்னேரியில் பெருந்தலைவர் காமராசரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
அதேபோல் நாகப்பட்டினம் மயிலாடுதுறை தமிழச்சங்கம் சார்பில், அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டு காமராஜர் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.