பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயப் பிரதிநிதிகள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கான எந்த ஒரு நலத்திட்டமோ, கடன் தள்ளுபடியோ அறிவிக்கபடவில்லை என வேதனை தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், பாசன விவசாயிகள் சங்கங்கள், கரும்பு விவசாயிகள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் குறைதீர் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மத்திய, மாநில அரசுகள் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கு...
2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை கடன் கிடைப்பதை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதேபோல், மாநில நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறைக்கு 11 ஆயிரத்து 894.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:கோட்டாட்சியரிடம் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்