பெரம்பலூர் பகுதியில் உள்ள ஆத்தூர் சாலையில் அண்ணாமலை காந்தி என்பவர், முன்று அடுக்கு மாடி கட்டடம் கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார். நகர ஊரமைப்பு சட்டத்தின் படி, முன் அனுமதியின்றி முன்று மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்ததால், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த கட்டட பணிகளுக்கு வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் இக்கட்டட உரிமையாளர் இதுகுறித்து எந்த வித தொடர் நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே இன்று காலை நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் ஸ்ரீதர், மண்டல நகராட்சி அமைப்பு ஆய்வாளர் வினோத், அலுவலக பணியாளர்கள் முன் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.
இதையும் படிக்க:அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் 24 மதுபான விடுதிக்கு சீல்வைப்பு!