பெரம்பலூரில் ரூ. 80.19 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள க்யூ பிரிவு குற்றப் புலனாய்வு துறை கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.,சாந்தா குத்து விளக்கு ஏற்றி, வளாகத்துக்குள் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், காவல்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புதிய காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் - காணொலி மூலம் திறந்துவைத்த முதலமைச்சர்