பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே மறவநத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஏரிக்குச் செல்லும் சாலையின் ஓரம் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் சடலம் இருந்துள்ளது.
சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண் சிசுவின் பெற்றோர் யார், எதற்காக அங்கு சடலத்தை வீசிச் சென்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ரூ.80 ஆயிரம்.. பெற்றக் குழந்தையை விற்ற பாசக்கார தந்தை!