பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரி. இவரது கணவர் பூமாலை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த மூன்று பேரும் பார்வைத்திறன் இல்லை. ராஜகுமாரி கணவர் பூமாலை இறந்து 10 வருடங்கள் ஆகிறது. இருந்தும் தனது பசு மாடுகளை வைத்து தனது குழந்தைகளைப் படிக்க வைத்துள்ளார்.
இதில் மூத்த மகன் சந்துரு கல்லூரி பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டும், இரண்டாவது மகள் சந்தியா, தற்போது 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர உள்ளார். இதில் சந்துரு பாடல்கள் பாடுவதில் அதிகம் விருப்பம் கொண்டவராக உள்ளவராகவும், சந்தியா தான் ஒரு தமிழாசிரியராகவும் ஆக வேண்டும் என்ற கனவோடு உள்ளனர். இதனால் தனது குடும்பத்திற்கு அரசு உதவியளிக்க வேண்டும் என்கிறார் அந்த ஏழைத்தாய் ராஜகுமாரி.
இது குறித்து ராஜகுமாரி கூறுகையில், ‘தனது மூன்று பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வழிவகை செய்யத் தமிழ்நாடு அரசு ஏதாவது நிதி ஒதுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.