பெரம்பலூர் மாவட்டத்தில் 202 முழுநேர நியாயவிலைக் கடைகள், 80 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என பொது விநியோக திட்டத்தின் கீழ் மொத்தம் 282 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 213 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 17 கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் 20 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு 20 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை தொடங்கி வைத்தனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,502 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். மேலும் இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் செல்வகுமரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்கள்: தொடங்கிவைத்த அமைச்சர் சி.வி. சண்முகம்!