பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதால் குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது.
இதனிடையே பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் நேரில் சென்று தீ விபத்தில் வீடு சேதமடைந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 25 கிலோ அரிசி, மளிகை பொருள்கள், சேலை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை நிவாரணமாக வழங்கினார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.