பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செங்குணம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறைக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் மூன்று புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடங்களை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த தொடக்கப்பள்ளிக்கு என்னால் முடிந்த பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து தருவேன் என்று உறுதியளித்தார். இதனையடுத்து, மாணவ மாணவிகளுக்கு தமிழ்ச்செல்வன் இனிப்புகள் வழங்கினார்.