பெரம்பலூர்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது அலி தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், "பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் 5,000 லிட்டர் பால் திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
![milk producers gave petition to perambalur collector](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12584012_117_12584012_1627351962173.png)
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பால் அனைத்தையும் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் ஊழல் செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இதையும் படிங்க: பால் கொள்முதல் செய்யாததற்கு எதிர்ப்பு - பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்