ETV Bharat / state

வெளிநாட்டில் கூலி தொழிலாளி உயிரிழப்பு - 130 நாள்களுக்குப் பிறகு சொந்த ஊர் வந்த உடல்

வெளிநாட்டில் உயிரிழந்த கூலி தொழிலாளியின் உடல் 130 நாள்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

வெளிநாட்டில் கூலி தொழிலாளி உயிரிழப்பு
வெளிநாட்டில் கூலி தொழிலாளி உயிரிழப்பு
author img

By

Published : Sep 2, 2021, 5:19 PM IST

பெரம்பலூர்: குன்னம் வட்டம் பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கௌசல்யா. இவர், மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது ராஜ்குமார் சவூதி அரேபியாவிற்கு கூலி வேலைக்குச் சென்றார்.

அங்குள்ள ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணி செய்த அவர் ஏப்ரல் 20ஆம் தேதி அங்கு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டு தரக்கோரி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தார்.

சொந்த ஊர் வந்த சடலம்

தொடர்ந்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) தீவிர முயற்சியின் காரணமாக வெளிநாட்டில் உயிரிழந்த கூலித் தொழிலாளி ராஜ்குமார் உடல் 130 நாள்களுக்கு பிறகு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.

அங்கிருந்து அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. 130 நாள்களுக்கு பிறகு இறந்த தனது கணவர் உடலை பார்த்து கெளசல்யா மற்றும் உறவினர்கள் அழுகை காண்போரை கலங்க செய்தது. மேலும் தனது கணவர் வேலை பார்த்த நிறுவனம் தங்களுக்கு உதவவில்லை என்றும் பிஞ்சு குழந்தையுடன் ஆதரவற்று தவிக்கும் தனக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என கெளசல்யா கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கணவரின் ஆசிட் வீச்சில் மனைவி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.