ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இந்நிலையில்,பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்ய கட்சியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தவர் பெயர் மாற்றப்பட்டு இன்று (மார்ச்26) காலை செந்தில்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால், அவர் வேட்புமனு தாக்கல் செய்ய மாலை மூன்று மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மிகவும் தாமதமாக வந்ததால் வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் வாங்க மறுத்துவிட்டார்.
இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும், நிர்வாகிகளும் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.