பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இருர் கூத்தனூர் சாலை, மங்குன் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயம் குடிமைப்பொருள் பதுக்கல் தடுப்புப் பிரிவினரால் கண்டறியப்பட்டு, தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவின் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து கூட்டுறவுத் துறையின் மூலமாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் 150 பெண் மற்றும் 50 பணியாளர்களைக் கொண்டு ஒன்பதாயிரத்து 915 பள்ளிகளில் 486 மெட்ரிக் டன் பெரிய வெங்காயத்தை, தற்போதுவரை மூன்றாயிரத்து 255 பைகளில் தரம் பிரிக்கப்பட்டு, அதில் 40 சதவீதம்முதல் 50 சதவீதம்வரை கழிவு போக 156 பெரிய வெங்காயத்தை தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக அம்மா சிறு பல்பொருள் அங்காடி, அம்மா பசுமை காய்கறி கடைகள், நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது பெரிய வெங்காயத்தை தரம் பிரிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.