சமீப காலமாக தமிழ்நாடு தண்ணீரின்றி தவிக்க பெரும்பாலான நீர்நிலைகள் தூர் வாரப்படாமல் இருந்ததும் ஒரு முக்கிய காரணம். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நமையூர் கிராமத்தின் நீராதராமாக விளங்கிய வரத்து வாய்க்கால்கள் நெடுநாட்களாக தூர் வாரப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சியால் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன. இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.