பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கூலித்தொழில் செய்ய கேரளாவில் உள்ள வயநாட்டிற்குச் சென்றிருந்தனர்.
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் கரோனா தீநுண்மி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதனால் அவர்கள் கூலி வேலை செய்யமுடியாமல் கேரளாவில் உள்ள விக்டோரியா கேம்பில் 33 நாள்களாகத் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் நான்கு பேரும் பெரம்பலூர் குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரனை போனில் தொடர்புகொண்டு சொந்த ஊர் திரும்ப தங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் பெரம்பலூரிலிருந்து தனது சொந்த செலவில் வாகனம் ஒன்றை ஏற்பாடுசெய்து வாகனத்திற்கான உரிய அனுமதி கடிதத்தை மாவட்ட ஆட்சியரகத்தில் பெற்று கேரளாவிற்கு அனுப்பிவைத்தார்.
![கேரளாவில் சிக்கித் தவித்த நால்வர் சொந்த ஊர் வருவதற்கு உதவிய எம்எல்ஏ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-04-corona-144-kerala-help-script-vis-7205953_06052020185938_0605f_1588771778_220.jpg)
நான்கு பேரும் நேற்று (மே 6ஆம் தேதி) காலை பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பினர். பின்னர் அவர்கள், சொந்த ஊர் திரும்ப உதவிய ஆர்.டி. ராமச்சந்திரனுக்கு தங்களது குடும்பத்தினரோடு சென்று நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து நான்கு பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கீழப்பெரம்பலூர் அரசுப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.