தமிழ்நாடு முழுவதும் தற்போது அக்னி வெயில் வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் பிரச்னை நிலவி வருவதாகவும், ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கொளப்பாடி சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் கோடை காலத்தில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லை என்று கூறினர். கரோனா பிரச்னை ஒருபுறம் இருக்க தற்போது குடிநீர் பிரச்னையும் தங்களை வாட்டுவதாகத் தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியை வஞ்சிப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க... குடிநீர் வேண்டி சமூக இடைவெளி கடைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல் !