கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கரோனா தீநுண்மி பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றித் தவிக்கும் ஏழை குடும்பத்தினருக்குப் பல்வேறு தரப்பினர் நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏழைக் குடும்பத்தினருக்கு நீதிபதிகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) மலர்விழி, தலைமை குற்றவியல் நீதிபதி கிரி உள்ளிட்டோர் நிவாரண உதவிகளை வழங்கினர். அப்போது தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து மக்கள் நிவாரண உதவியைப் பெற்றுச்சென்றனர்
இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் சார்பு நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சாமானியர்கள் மீது அராஜகம்: வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர்