பெரம்பலூர்: நான்கு ரோடு அருகே உள்ள அவ்வை தெருவில் வசிப்பவர், திவ்யா. இவரது கணவர் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மாடியில் வாடகைக்கு வசித்து வருபவர் கலைவாணன், அமமுக தகவல் தொழில் நுட்ப அணியின் செயலாளர் ஆவார்.
இந்நிலையில் திவ்யா தனது உறவினர் வீட்டுக்கும், கலைவாணன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கும் நேற்று சென்று விட்டு, இன்று வீடு திரும்புகையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கலைவாணன் வீட்டில் 13 சவரன் தங்க நகை, ரூ.47 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கேமரா மற்றும் திவ்யா வீட்டில் 28 சவரன், ரூ.35 ஆயிரம் என மொத்தம் 41 சவரன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மோப்ப நாய், மற்றும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு
காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகேயுள்ள எம்ஆர்எஃப் தனியார் நிறுவனத்தை மூடக்கோரி மனு