பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது இந்திய தொழிலாளர் கட்சியினர் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், புதிய தொழிலாளர் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
புதிய தேசிய கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சட்டங்களை கைவிட வேண்டும், மத்திய அரசின் பொது விநியோகத் திட்டத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ திட்டத்தில் பெறப்பட்ட தொழிலாளர்களை நிதிகளை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர். பின்பு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.