ETV Bharat / state

பசுமையாக இருந்த பெரும்பலூரையும் படாத பாடுபடுத்தும் கரோனா: வங்கிகளுக்குத் தடா! - கரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் வங்கிகள் இயங்க தடை

பெரம்பலூர்: கரோனா சமூகப் பரவலாகிவிடுமோ என்ற அச்சம் நிலவிவரும் நிலையில் பெரம்பலூரில் தொற்று பாதித்த பகுதிகளில் மறு உத்தரவு வரும்வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார்.

கரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் வங்கிகள் இயங்க தடை

author img

By

Published : May 6, 2020, 5:45 PM IST

தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இப்பெருந்தொற்றால் இதுவரை 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 11 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைகளிலிருந்து பெரம்பலூருக்கு வந்தவர்களில் நேற்று முன்தினம் (மே4) மட்டும் 25 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. நேற்று (மே5) ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டது. இதனிடையே கரோனா பாதித்த ஒன்பது கிராமங்களில் மூன்று நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது.

கரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் வங்கிகள் இயங்க தடை
கரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் வங்கிகள் இயங்க தடை

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளான குன்னம் வட்டம் அகரம்சிகூர், வயலப்பாடி, குன்னம், மேலமாத்தூர், கொளக்காநத்தம், பரவாய், துங்கபுரம், வேப்பூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இன்றுமுதல் மறு உத்தரவு வரும்வரை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் கரோனா தீநுண்மி தொற்று பாதித்த பகுதிகள் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதையடுத்து சென்னையிலிருந்து பெரம்பலூருக்கு வந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.