பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்தூர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி விஜயா. இவர் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்து வருகிறார்.
கர்ணன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் வாக்குவாத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கர்ணன் வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து விஜயாவை சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன விஜயா அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கர்ணனை கைது செய்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.