பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், அம்மாபாளையம், பாடாலூர், குன்னம், அகரம்சீகூர் மற்றும் அரும்பாவூர் உள்ளட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கொட்டரை, மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பி, தண்ணீர் வெளியேறி வருகிறது.
அதேபோல விசுவக்குடி நீர்த்தேக்கத்திலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் அரும்பாவூர் பெரிய ஏரி, சின்ன ஏரி, வடக்கலூர் ஏரி, லாடபுரம் பெரிய ஏரி மற்றும் வெங்கலம் ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி என மொத்தமாக 11 ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.
தற்போது 12ஆவது ஏரியாக செஞ்சேரியில் உள்ள ஏரி நிரம்பி தண்ணீர் கடைக்கால் வழியாக நிரம்பி வெளியேறி வருகிறது. அதனை அப்பகுதி பொதுமக்கள், சிறுவர்கள் வரவேற்று மகிழ்ச்சி பொங்க விளையாடி வருகிறார்கள். மீதமுள்ள ஏரிகளில் 75 விழுக்காடு அளவு தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: Goat-களுக்கு ரெயின் கோட் - தஞ்சாவூர் விவசாயி அசத்தல்!