ETV Bharat / state

’முட்டாள், தொலைத்து விடுவேன்’ : மருத்துவப் பணிகள் இணை இயக்குநரை மிரட்டிய மருத்துவர் - வைரல் ஆடியோ! - பெரம்பலூர் செய்திகள்

பெரம்பலூர் : பெண் மருத்துவருக்கு உரிய பணிகள் வழங்காததாகக் கூறி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனரை, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மிரட்டும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர்
author img

By

Published : Nov 2, 2020, 11:30 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனராகப் பணிபுரிந்து வருபவர் திருமால். இவர் கிருத்திகா என்ற மருத்துவருக்கு அடிக்கடி மாற்றுப் பணிகள் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்துப் பேசுவதற்காக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் செந்தில், மருத்துவப் பணிகள் இணை இயக்குனரை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மருத்துவர் செந்தில் இணை இயக்குனருக்கு மிரட்டல் அளிக்கும் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

’முட்டாள், தொலைத்து விடுவேன்’ என மருத்துவப் பணிகள் இணை இயக்குனரை மிரட்டிய மருத்துவர் - வைரல் ஆடியோ!

இந்த ஆடியோவில் JD பொறுப்பில் இருக்கும் உனக்கு அறிவு உள்ளதா என்றும், Stupid (முட்டாள்) என்றும், தொலைத்து விடுவேன் என்றும் மிரட்டும் தொனியில் மருத்துவர் செந்தில் பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.