ETV Bharat / state

பெரம்பலூரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்! - தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்

பெரம்பலூர்: வாலிகண்டபுரம் - கீழ்ப்புலியூர் சாலையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.

gutka
gutka
author img

By

Published : Mar 24, 2021, 10:48 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த வகையில், பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் - கீழ்ப்புலியூர் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டனர். அப்போது அதில் குட்கா பொருள்களைக் கடத்திவந்திருந்தைக் கண்டுபிடித்தனர். பின் அந்த வாகனத்தை மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு வாகன ஓட்டுநர் சூரமங்கலத்தைச் சேர்ந்த அருண் குமார் என்பவரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 15 மூட்டைகளில் சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.