பெரம்பலூர் அருகே உள்ளது நெடுவாசல் கிராமம். இந்த நெடுவாசல் கிராமத்தில் பெரம்பலூர் நகராட்சியில் குப்பை கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதனிடையே பெரம்பலூர் துறைமங்கலம் ஏரியில் உபரி நீரானது நெடுவாசல் வழியாக செல்லும் மருதையாறு மூலம் பல்வேறு கிராமங்களுக்கு விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது.
இதனிடையே நகராட்சி நிர்வாகத்தின் கழிவுநீரால் தற்பொழுது மருதை ஆற்றில் கழிவு நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நெடுவாசல் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நகராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து கழிவு நீரை ஆற்றில் திறந்துவிட்டு வருகின்றனர் என்று பொதுமக்கள் வினவுகின்றனர்.
மேலும் கழிவுநீர் தேங்கி இருக்கும் காரணத்தினால் நெடுவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவு நீர் திறந்து விடாமல் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: சாலையில் நிரம்பி வழியும் கழிவுநீர் - துர்நாற்றத்தால் மக்கள் அவதி