பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே புறவழிச்சாலை பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் சுற்றிமுற்றி பார்த்துள்ளனர்.
அப்போது, கட்டைப் பைக்குள் துண்டால் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், குழந்தையை மீட்டனர். பின்னர், குழந்தையை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![பெரம்பலூர் சாலையில் பச்சிளம் பெண் குழந்தை மீட்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-01-road-side-baby-recover-script-image-7205953_25062020094003_2506f_1593058203_469.jpg)
பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தையை சாலையோரம் வீசியது யார் என்பது குறித்து சுகாதாரத் துறையினரும் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...சென்னையில் இன்று மட்டும் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு!