பெரம்பலூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை தீரன் நகர்ப் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் பயிற்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர், “மாவட்டம் முழுவதும் குற்றங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தங்கள் பகுதியில் நடக்காமல் காவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே தடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் காவல் அலுவலர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'கொரோனாவை விரட்டுவோம்' - வைரலாகும் தலைமைக் காவலரின் விழிப்புணர்வுப் பாடல்