ETV Bharat / state

கார் மீது லாரி மோதி விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு - கார் மீது லாரி மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாச்சூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கார் மீது லாரி மோதி விபத்து
கார் மீது லாரி மோதி விபத்து
author img

By

Published : Apr 3, 2022, 8:10 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஒரு காரில் சென்றுள்ளனர்.

சாமி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் இன்று (ஏப்.03) மதியம் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றனர். அப்போது, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மலையப்ப நகர் பிரிவு பாதை அருகே வந்தபோது இவர்களது காரை முந்திச் சென்ற கார் மோதுவது போல் வந்ததால் வலதுபுறம் காரை திருப்பியுள்ளனர்.

அப்பொழுது சென்னை - திருச்சி மார்க்கத்தில் எதிர்திசையில் வந்த லாரி, கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கண்ணன், கார்முகில் லிங்கேஸ்வரன், தமிழரசி ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த சந்திரவதணன், கதிரவன் கிஷோர், திவாகர் மற்றும் வேதவல்லி ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தினை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேசம்; விபத்தில் நீதிபதி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.