கரோனா வைரஸ் தாக்கத்தினால் தமிழ்நாடு முழுவதும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள பெண்ணகொணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதனால், இம்மாவட்டத்தில் கோயம்பேடு தொடர்புடைய கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மேற்கண்ட நபர்களோடு தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து, தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 137-ஆக உயர்ந்துள்ளது. அதிலும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்குத் தொடர்புடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்ப்பிணி தங்கை அவமதிப்பு...காவல்துறை மீது வருத்தம் தெரிவித்த ராணுவ படை வீரர்!