ETV Bharat / state

திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் உடல் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு தானம்! - உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்

பெரம்பலூர்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் மு. தேவராஜன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ.
author img

By

Published : Dec 27, 2019, 4:26 PM IST

Updated : Dec 27, 2019, 6:30 PM IST

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் தேவராஜன். கடின உழைப்பு காரணமாக மருத்துவத் துறையில் தடம்பதித்து மருத்துவரான இவரை, 'திமுகவின் அடித்தளம்' என்று திமுக நிர்வாகிகள் அழைத்தனர்.

1996 முதல் 2001 வரை பெரம்பலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்ட இவர், உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு திமுக முக்கியப் பிரமுகர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரது உடல் தானமாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் - திமுக திடீர் வழக்கு!

Intro:பெரம்பலூரில் திமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் மு தேவராஜன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

Body:பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி என்ற என்ற கிராமத்தில் பிறந்தவர் தேவராஜன் கடின உழைப்பு காரணமாக மருத்துவ துறையில் தடம் பதித்து மருத்துவரான திமுகவின் அடித்தளம் என்று திமுக நிர்வாகிகள் அழைத்தனர் 1996 2001 வரை பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தார் அதிமுகவின் கோட்டையான பெரம்பலூரில் திமுகவை நிலை நிறுத்தியவர் பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான இவர் ஏழைகளிடம் கறாராக பணம் கேட்காமல் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பலரின் உயிரை மீட்டு குடும்பத்துடன் வாழ வைத்துள்ளார் மேலும் பெரியாரின் தொண்டரான இவர் அவர்களிடம் பெரியவர்களிடமும் மதிப்பளிக்க கூடிய மனிதராக இருந்தார் இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்

Conclusion:அவரது உடலுக்கு திமுக முக்கிய பிரமுகர்கள் மருத்துவர்கள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அவரது உடல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இன்று மாலை பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக வழங்கப்படுகிறது
Last Updated : Dec 27, 2019, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.