பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமம் தாமரைக்குளம் அருகேயுள்ள குளத்தை, தனிநபர் குத்தகைக்கு எடுத்து மீன்களை வளர்த்து வருகிறார்.
இன்று (நவ.12) காலை அந்த குளத்தில் இருந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. இதைக்கண்ட பொதுமக்கள் குளத்தை குத்தகைக்கு எடுத்த நபரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே அங்கு வந்த அவர், குளத்தில் தான் வளர்த்து வந்த மீன்கள் செத்து மிதந்ததைப் பார்த்து குழம்பிப்போனார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விஷம் கலந்ததால் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சரவண பொய்கையில் இறந்து மிதந்த மீன்கள்!